நம்பினால் நம்புங்கள்!
சேட் ஜிபிடி (Chat GPT) புத்தகம் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டது.அமேசானில் மட்டும் சேட் ஜிபிடி எழுதிய 200 நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அமேசான் சேட் ஜிபிடிக்கு ஒரு எழுத்தாளர் பக்கத்தை வேறு உருவாக்கிக் கொடுத்துவிட்டது.  கூகுள் எல்.எம் மியூசிக் (Google LM music) என்ற தளத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. அங்கே டெக்ஸ்ட் டு மியூஸிக், அதாவது கவிதையை அங்கே தட்டச்சினால் அதற்கான மியூஸிக், இசைக்கருவிகளை எல்லாம் கூகுளே கொடுக்கும்உங்கள் விடியோக்களுக்கு ராயல்டி இல்லாத ஏ.ஐ. இசை வேண்டுமா? சவுண்ட்ஃபுல் (Soundful) தளம் உதவுகிறது. முழுக்க முழுக்க ஏ.ஐ இசையமைத்து பல மில்லியன் வியூக்களைப் பெற்ற பாடல்கள் பல யூடியூப்பில் உள்ளன. சீனாவில் உள்ள டென்சென்ட் (tencent) எனும் இணையதளம் முழுக்க ஏ.ஐ.யையே இசை அமைத்து, பாடவைத்து 1000 பாடல்களுக்கு மேல் யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அதில் டுடே (Today) எனும் பாடல் 10 கோடிப் பேரால் கேட்கப்பட்டு $ 350,000 (ரூ. 3 கோடி) வருமானத்தை ஈட்டிக்கொடுத்துள்ளது!
நியாண்டர் செல்வன்
|