தேனீக்களுக்கு ஒரு ஹோட்டல்!
பூமி அதன் போக்கில் இருக்க என்ன காரணம் தெரியுமா?
தேனீக்கள்தான்!தேனீக்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. நாம் உண்பதில் மூன்றில் ஒரு பங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு தேனீக்களே உதவுகின்றன.என்றாலும் தேனீக்களிடம் இருந்து நாம் பெறும் மிகப்பெரும் பலன் மகரந்தச் சேர்க்கைதான். சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் நிலைத்தன்மையுடன் இருக்க மகரந்தச் சேர்க்கை நடைமுறை மிக முக்கியம். ஏனெனில், அதுதான் தாவரங்களை இவ்வுலகில் பரப்பச் செய்கிறது. இதனால்தான் பூமி இன்று நாம் பார்ப்பது போன்றுள்ளது. மகரந்தச் சேர்க்கை செய்து பயிர்கள் வளர்வதற்கு தேனீக்கள் உதவுகின்றன. பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கத்திற்கு மகரந்தத் துகளைத்தான் பயன்படுத்துகின்றன. ஆனால், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை இனங்கள் குறைந்து வருகின்றன. மனிதர்கள் அதிகமான வீடுகளை கட்டும் நிலையில் தேனீக்களின் வீடுகள் அழிந்துவருகின்றன.இந்த பிரச்னையை சமாளிக்க செர்பியாவில் தேனீக்களுக்கு என புதிய ஹோட்டல் ஒன்றை திறந்திருக்கிறார்கள் என செய்தி வெளியிட்டிருக்கிறது பிபிசி.
காம்ஸ் பாப்பா
|