தீபாவளி Moments!



தீபாவளி முடிந்துவிட்டது. நம்மால் இயன்ற வரையில் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடினோம். திரையரங்கு சென்று படங்களும் பார்த்தோம்.சினிமா நடிகர், நடிகையர் இந்தத் தீபாவளியை எப்படி கொண்டாடினார்கள்..? ஒரு சிலரின் moments என்னவென்று பார்ப்போமா..?

ஜூனியர் என்டிஆர்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆர் தனது மனைவி, குழந்தைகளுடன் பாரம்பரிய குர்தா - பைஜாமா அணிந்து தீபாவளியை கொண்டாடினார். அவரது புகைப்
படம் சமூக வலைதளங்களில் வெளியானதுமே வைரலானது.

அர்ஜுன் தாஸ்

மெரூன் நிற செர்வாணி அணிந்து தனது தீபாவளி வாழ்த்துக்களுடன் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் அர்ஜுன் தாஸ்.

ராஷி கண்ணா

அரண்மனை கிளி தனது வீட்டில் ரங்கோலி, நடுவில் விளக்கு சகிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் பகிர்ந்திருந்தார். வெல்வெட் கத்தரிப்பூ நிற சரி வேலைப்பாடுகள் செய்த சல்வாரில் ராசி கண்ணா ஜொலித்தார்.

ராஷ்மிகா மந்தனா

‘போட்டோ கிரெடிட்: ஆனந்த் தேவரகொண்டா’ இந்த வார்த்தைகளுடன் ராஷ்மிகா மந்தனா தனது தீபாவளி புகைப்படத்தை பகிர்ந்ததுதான் தாமதம்... எங்கும் எதிலும் வைரல்.
காரணம், ஆனந்த் தேவரகொண்டா, விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் மற்றும் நடிகர்!எனில் ராஷ்மிகா மந்தனா தனது தீபாவளியை ஹைதராபாத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா வீட்டில்தான் கொண்டாடி இருக்கிறார் என்பது இதன் மூலம் ஓரளவு நிரூபணம் ஆகி இருக்கிறது. சந்தன நிற சல்வாரில் கைகளில் விளக்கு, தாம்பூலம் சகிதமாக ராஷ்மிகாவின் புகைப்படம் தற்போது பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

சூர்யா - ஜோதிகா

குடும்ப சகிதமாக பட்டாடை உடுத்தி புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் ஜோதிகா. அதில் இருவருக்கும் தோளுக்கு மேல் வளர்ந்த மகள் மற்றும் மகன் இருப்பதைக் கண்டு இணையதளம் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. இருவருக்கும் வயதே தெரியாத அளவிற்கு ஃபிட்னஸில் காட்டும் ஆர்வத்தையும் பாராட்டத் தவறவில்லை.

கீர்த்தி சுரேஷ்

பிங்க் நிற சல்வாரில் சந்தோஷமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சமந்தா

அழகும் தன்னம்பிக்கையும் ஒருசேர சமந்தா தீபாவளி திருநாளில் தனது சொந்த சாகி பிராண்ட் உடையில் விளக்கேற்றும் புகைப்படம் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

பூஜா ஹெக்டே

சிவப்பு நிற புடவையில் தனது அப்பா அம்மாவுடன் ‘ஹாப்பி தீபாவளி’ வாழ்த்துடன் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

மேலும் பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட் தம் குழந்தையுடன் தீபாவளியை கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் தங்களது புகைப்படங்களைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜான்வி கபூர் மற்றும் போனி கபூர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

ஆயுஷ்மான் குரானா தனது மனைவியுடன் இருவரும் கருப்பு நிறத்தில் ஒரே மாதிரியான உடையணிந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது அன்புச் சகோதரர் பாபி தியோலை (‘கங்குவா’ வில்லன்) அரவணைத்து சகோதரர் சன்னி தியோல் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ஷாலினி நியூட்டன்