5G கோலிவுட் நெட் ஓர்க்!
அஜித் 1. கார், பைக் மீது அஜித்துக்கு இருக்கும் பிரியம் உலகத்துகே தெரியும் என்றாலும் அதன் கையேடு புத்தகத்தை முதல் காரியமாக முழுவதும் வாசித்து விடுவாராம். 2. குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். 3. ரசிகர் மன்றம் இல்லையென்றாலும் ரசிகர்கள் மீது அதிக பிரியம் உண்டு. 4. தன்னம்பிக்கை தொடர்பான கருத்துகளை பேசவும் கேட்கவும் ஆர்வம் காட்டுவார். 5. தன்னுடைய பைக்குகளை தானே பராமரிப்பது மிகவும் பிடித்த விஷயம்.
விஜய்
1. காலை உணவு இரண்டு இட்லி, கெட்டி சட்னி, அவித்த முட்டைகள், பச்சை வெள்ளரிக்காய். 2. கார் மீது பிரியம் என்பதால் எந்த வகை கார் அறிமுகமானாலும் அந்தக் காரை உடனடியாக புக் பண்ணுவார். 3. நேர நிர்வாகத்தில் சரியாக இருப்பார். 4. உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் 30 நிமிடம் உடற்பயிற்சி கட்டாயம் இருக்கும். 5. விலையுயர்ந்த வாட்ச் பிடிக்கும்.
விக்ரம்
1. அறிமுகம் இல்லாதவர்களிடமும், தானாக முன்வந்து பேசுவது, செஃல்பி எடுப்பது பிடிக்கும். 2. வீட்டுக்கு அடுத்து அதிகமாக செல்லும் இடம் ஜிம். 3. நெருங்கிய நண்பர்களுக்கு விலை உயர்ந்த பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பது பிடிக்கும். 4. கதை சொல்லிக் கேட்பதை விட அதைப் புத்தகமாகக் கொடுத்தால் உடனே வாசித்துவிடுவார். 5. தனக்குப் பிடித்த படங்களை தன் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து மறுபடி பார்ப்பார்.
சூர்யா
1. ஆடி, ரேஞ்ச் ரோவர் என காஸ்ட்லி கார்கள் மீது விருப்பம் அதிகம். அனைத்து கார்களின் பதிவு எண்களிலும் தவறாமல் எண் ஐந்து வரும்படி பார்த்துக்கொள்வார். 2. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரசிகர்களுக்கு சர்பிரைசாக போன் பேசுவது பிடிக்கும். சில சமயம் ரசிகர்களுடன் போட்டோசெஷன் பண்ணுவதும் பிடிக்கும். 3. தம்பி கார்த்தி, தங்கை பிருந்தா குடும்பம் மீது அதிகம் ப்ரியம் உண்டு. 4. தன்னைச் சந்திக்க வருகிறவர்களுக்கு விதவிதமான உணவுகள் கொடுத்து மகிழ்வார். 5. தலைக்கவசம் போட்டுக்கொண்டு புல்லட்டில் வலம் வருவது பிடித்தமான வாடிக்கை.
தனுஷ்
1. வீட்டின் இன்டீரியரில் அதிக ஆர்வம். போயஸ் தோட்ட வீட்டின் இன்டீரியர் அவர் கைவண்ணம்தான். 2. கதை, திரைக்கதை எழுதுவதைக் காட்டிலும் பாடல் எழுதுவதில் ஆர்வம் அதிகம். 3. எல்லா தெய்வங்களும் பிடிக்கும் என்றாலும் சிவன் மீது கூடுதல் பக்தி. 4. சினிமாவில்தான் நவநாகரிக உடைகள். மற்ற நேரங்களில் நாலுமுழ வேட்டிதான் ஃபேவரைட். 5. உடன் நடித்த நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரிடம் அவர்கள் எதிர்பாரா நேரத்தில் போன் செய்து ஆச்சரியப்படுத்துவது பிடிக்கும்.
ராஷ்மிகா மந்தனா
1. அக்ஷய்குமார், ஸ்ரீதேவி படங்கள் ஆல் டைம் ஃபேவரைட். 2. புத்தகப் புழு. குறிப்பாக துப்பறியும் கதைகள் என்றால் எடுத்த வேகத்திலேயே வாசித்து முடித்துவிடுவாராம். 3. கருப்பு நிற உடைகள், சூட் உடுத்துவதில் ஆர்வம் அதிகம். 4. சாக்லேட், இத்தாலி ஐஸ் கிரீம்கள் என்றால் உருகிவிடுவாராம். 5. பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
கீர்த்தி சுரேஷ்
1. ஸ்ரீதேவி, வித்யாபாலன், பார்வதி பிடித்த நடிகைகள். 2. ஃபேஷன் டிசைனிங் மீது ஆர்வம் அதிகம் உண்டு. 3. நீச்சல் வீராங்கனை என்பதால் நீந்தாமல் ஒரு நாளும் இருந்ததில்லையாம். 4. அம்மா கையால் சுட்ட தோசை என்றால் மூன்று வேளையும் ஒரு பிடி பிடிப்பாராம். 5. விதவிதமான வாசனைத் திரவியங்கள் என்றால் விலை கேட்காமலேயே பில் போடச் சொல்வாராம்.
சமந்தா
1. ஃபிட்னஸ் புலி. 2. நம்மூர் இட்லி, சாம்பார், சைனீஸ் உணவு பிடித்த டிஷ். 3. புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய சமந்தாவுக்கு ரோண்டா பைர்னேவின் ‘த சீக்ரெட்’ புத்தகம் ஃபேவரைட். 4. பல வருடங்களாக ‘வெல்வெட் ஹஸே’ பெர்ஃபியூம்தான் சமந்தாவின் பிடித்த வாசனைத் திரவியம். 5. ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ பார்க்குமளவுக்கு டை ஹார்ட் ஃபேன்.
கீர்த்தி ஷெட்டி
1. மொழிகள் மீது ஆர்வம் என்பதால் தெரியாத மொழிகளையும் கற்றுக்கொள்வதில் ஈடுபாடு அதிகம். துளு, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடம் என அம்மணிக்கு பல மொழிகள் அத்துப்படி. 2. கேரளாவும் கேரளாவைச் சார்ந்த இடங்களும் எப்போதும் ஃபேவரைட். 3. கிரிக்கெட் மேட்ச் ஆர்வமாகப் பார்க்கும் கீர்த்தி, எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆட்டம் என்றால் உலகத்தையே மறந்து டிவி முன்பு அமர்ந்து விடுவாராம். 4. கீர்த்திக்கு ஃபிட்னஸ், உடற்பயிற்சி, டயட் இந்த வார்த்தைகள் எல்லாம் அலர்ஜியாம். ஆனால், அவரின் ஒரே ஃபிட்னஸ் சீக்ரெட் டான்ஸ். 5. ‘அந்த இயக்குநரிடம் பணியாற்றுவது கஷ்டம்’ என்று யாரேனும் சொன்னால் அவர் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவார்.
நயன்தாரா
1. வீட்டில் தயாரித்த உணவுகள்தான் அதிகம் பிடிக்கும். 2. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேரளாவில் தாய்வீட்டுக்கு போகப்பிடிக்கும். 3. சார்ட்டட் ஃப்ளைட்டில் பயணம் செய்வதில் விருப்பம். 4. இப்போது குழந்தைகள்தாம் முழுநேர விருப்பம். வீட்டில் இருக்கும் அவர்களுக்கு எல்லா வேலையும் இவரே செய்கிறார். 5. விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது ரொம்பப் பிடிக்கும்.
எஸ்.ராஜா
|